உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தினமும் நகராட்சி குப்பை கிடங்கில்  தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு 

தினமும் நகராட்சி குப்பை கிடங்கில்  தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் குப்பை கிடங்கில் குப்பையை மொத்தமாக தீயிட்டு கொளுத்தி விடுவதால் புகைமண்டலம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை ரோட்டில் ராமநாதபுரம் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பையை தரம் பிரித்து உரமாக்கி விற்பனை செய்ய வேண்டும். இதனை செய்யாமல் குப்பையை முழுமையாக சேகரித்து வந்து கிடங்கில் கொட்டப்படுகிறது.அங்கு துப்புரவு பணியாளர்கள் குப்பைக்கு தீ வைக்கின்றனர். இதில் எழும் புகை மூட்டம் கிழக்கு கடற்கரை ரோடு வரை வருவதால் போக்குவரத்தில் உள்ள வாகனங்கள் புகை சூழ்ந்து விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. புகை மூட்டம் பட்டணம்காத்தான் குடியிருப்பு பகுதியில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்துகிறது. கிழக்கு கடற்கரை ரோட்டில் நடைபயிற்சி செல்லும் பலர் மூச்சு திணறி மயங்கி விழும் நிலை உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்