உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்மாயில் வண்டல் மண் அள்ள அனுமதி விவசாயிகள் மகிழ்ச்சி

கண்மாயில் வண்டல் மண் அள்ள அனுமதி விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாடானை: கண்மாய், குளங்களில் வண்டல் மண் எடுக்க தாசில்தார் அளவில் அனுமதி வழங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்மாய், குளங்களில் நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்து செல்ல அரசு அறிவித்துள்ளது. இது குறித்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கு முன் தி.மு.க., தேர்தல் அறிக்கை குழு துாத்துக்குடியில் நடந்த போது ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் அங்கு சென்று பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம்.அதில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு கலெக்டரிடம் அனுமதி பெற்று மண் எடுக்க வேண்டியுள்ளது.இதனால் விவசாயிகளுக்கு வீண் அலைச்சல் மற்றும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. ஆகவே தாசில்தார் அளவில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம். தற்போது வண்டல் மண் எடுக்க அரசு வெளியிட்ட அறிவிப்பில் தாசில்தார் அளவில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ