உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கிடைக்குமா விவசாயிகள் எதிர்பார்ப்பு

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கிடைக்குமா விவசாயிகள் எதிர்பார்ப்பு

ராமநாதபுரம்,:காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத்திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். காவிரியில் ஏற்படும் வெள்ள காலங்களில் வீணாக கடலில் கலக்கும் 6300 மில்லியன் கன அடி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பி அதன் மூலம் பயன்பெறுவதற்காக காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை 2021 பிப்.,ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி ரூ.14 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் துவக்கி வைத்தார். இதற்காக ரூ.6941 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தை 3 பிரிவுகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 261.5 கி.மீ., நீள கால்வாய் அமைத்து காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைக்கப்பட்டு 1054 ஏரிகளை இணைத்து 1 லட்சத்து 9962 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.தி.மு.க., அரசு வந்த பின் இத்திட்டத்திற்கு இது வரை பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மூன்று பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் பணிகளை செய்தால் மட்டுமே இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது. முதல் பிரிவில் மட்டும் 3 கி.மீ., மட்டுமே கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் பணிகள் மந்த கதியில் உள்ளன. இன்று(மார்ச் 15) அரசு வேளாண் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி