உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆஞ்சநேயர்புரம் கடற்கரை பகுதியில் சாலை வசதியின்றி மீனவர்கள் அவதி

ஆஞ்சநேயர்புரம் கடற்கரை பகுதியில் சாலை வசதியின்றி மீனவர்கள் அவதி

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சியில் ஆஞ்சநேயர்புரம் கடற்கரையில் ரோடு வசதியின்றி வாகனங்களில் செல்ல முடியாமல் தலைச்சுமையாக மீன்களை சுமந்து வந்து மீனவர்கள் சிரமப்படுகின்றனர்.ஆஞ்சநேயர்புரம் முதல் களிமண்குண்டு வரை கிழக்குப் பகுதியில் ஒரு கி.மீ., ரோடு வசதியின்றி மண்மேவி உள்ளது. களிமண்குண்டு மன்னார் வளைகுடா கடலில் 180 நாட்டுப் படகுகளும், சிறு வத்தைகளும் உள்ளன. கடற்கரைப் பகுதியில் குறிப்பிட்ட தொலைவிற்கு தார் ரோடு அல்லது கிராவல் சாலை இல்லாததால் மீனவர்கள் சிரமப்படுகின்றனர்.களிமண்குண்டு மீனவர் பஞ்சமுத்து கூறுகையில் ஆஞ்சநேயர் புரத்திலிருந்து களிமண்குண்டு வரை ஒரு கி.மீ.,க்கு மீனவர்கள் தங்களுடைய நாட்டுப்படகில் இருந்து மீன்களை ஏலம் விடுவதற்காக ஏலக்கூட்டத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்கின்றனர்.ரோடு வசதி கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன். கடற்கரை பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. எவ்வித மின் விளக்குகளும் அமைக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை