உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் தொடரும் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரத்தில் தொடரும் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரத்தில் இன்றும் மூன்றாம் நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் சிறிய ரக விசைப்படகில் மீன்பிடிக்க செல்கின்றனர்.ராமேஸ்வரத்தில் இறால், நண்டு, கணவாய், காரல், சங்காயம் உள்ளிட்ட மீன்களுக்கு வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் இழந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். எனவே மீன்களுக்கு போதிய விலை கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 8 முதல் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று வியாபாரிகளுடன் மீனவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மூன்றாம் நாளான இன்றும் (ஜூலை 10) , 500 பெரிய விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தினர். ஆனால் 120 சிறிய ரக விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ளதாக மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ