உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டி20 உலக கோப்பைக்கு தயார் முன்னாள் இலங்கை வீரர் தகவல் 

டி20 உலக கோப்பைக்கு தயார் முன்னாள் இலங்கை வீரர் தகவல் 

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நண்பர்கள் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாய்சா டூமினி நுவான் தரங்கா, தற்போதைய கிரிக்கெட் வீரர் சேக்கு பிரசன்னா, மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் வீரர் வீர்கொடி தானுஷ்கா ஜீவகா, சர்வதேச கிரிக்கெட் கிளப் பயிற்சியாளர் காமே அசலா பெரைரா ஆகியோர் பங்கேற்றனர்.தரங்கா கூறுகையில், “கிரிக்கெட்டில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஐ.சி.சி., பல்வேறு விதிகளை மாற்றம் செய்துள்ளது. டி20 உலக கோப்பைக்கு இந்தியா உறுதியான அணியை பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தன் நாட்டில் விளையாடவுள்ளது. தற்போதைய சாம்பியனான ஆஸ்திரேலியா அணியும் வலுவாக உள்ளது. உலக கோப்பை போட்டியை எதிர்கொள்ள இலங்கை அணியும் தயாராகி வருகிறது,” என்றார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் மாரீஸ்வரன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை