உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கலெக்டர் அலுவலகத்தில்  இலவச பேட்டரி கார் சேவை

கலெக்டர் அலுவலகத்தில்  இலவச பேட்டரி கார் சேவை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர்கள்,மாற்றத்திறனாளிகள் வசதிக்காககட்டணமில்லா பேட்டரி கார் இயக்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், வாகனவிற்பனையாளர்கள் அசோசியேஷன் சார்பில் ரூ.3 லட்சத்து75 ஆயிரத்தில் புதிய பேட்டரி கார் வாங்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கைகள் தொடர்பாகவரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பஸ் ஸ்டாப்பில் இருந்து இலவசமாக கலெக்டர் அலுவலகம் வரை இயக்கப்படுகிறது.இச்சேவையை கலெக்டர் விஷ்ணுசந்திரன் துவக்கி வைத்தார். இந்த வாகனம்காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை செயல்படும்.இதில் நீதிமன்றம், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலங்களுக்கும் செல்லாம். விழாவில் வட்டார போக்குவரத்து அலுவலர் ேஷக்முகமது, வாகன விற்பனையாளர்கள் அசோசியேஷன் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ