உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெண்குழந்தைகள் கல்வி விழிப்புணர்வு முகாம்

பெண்குழந்தைகள் கல்வி விழிப்புணர்வு முகாம்

உச்சிபுளி : உச்சிபுளி அருகே புதுமடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளின் கல்வி அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி தலைமை வகித்தார்.குழந்தை உரிமைகளும் நீங்களும் என்ற அமைப்பு, ரூரல் ஒர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டி சார்பில் பணியாளர் ராஜாத்தி பெண் குழந்தைகளின் கல்வி நாட்டின் அவசியம் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.பெண்கள் கட்டாயமாக 18 வயது வரை கல்வி கற்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தனர். கையெழுத்து பிரசாரம் நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை