தங்கத்திற்கு வரி குறைப்பு; பெண்கள் வரவேற்பு
எஸ்.ராஜாத்தி, குடும்பத்தலைவி, அரியமான்பட்ஜெட்டில் அலைபேசிகள், உதிரிபாகங்கள், சார்ஜர்களுக்கு சுங்கவரி 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஸ்மார்ட் போன் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. இதே போல தங்கம், வெள்ளிப்பொருட்களுக்கு 6 சதவீதம், பிளாட்டினம் நகைகளுக்கு 6.4 சதவீதம் சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் வர்த்தகத்திற்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளுக்கு நாள் உயர்ந்து வந்த தங்கம் விலையை குறைத்துள்ளதை பெண்கள் வரவேற்கிறோம்.விவசாயிகளுக்கு புதிய திட்டம் இல்லை
எஸ்.சக்திராஜன், விவசாயி, ராமநாதபுரம்சுங்கவரி குறைப்பால் அலைபேசி, தங்கம் விலை குறையும். இதை வரவேற்கிறோம். மத்திய அரசின் பட்ஜெட்டில் பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை. வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது, உற்பத்தியை அதிகரிக்க, ஊக்கப்படுத்த புதிய திட்டங்களை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்
டி.முத்துப்பாண்டி, தலைவர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், ராமநாதபுரம்மத்திய அரசு பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களின் உயிர் பாதுகாப்பிற்காகவும், சேமிப்பதற்காகவும் எல்.ஐ.சி., மருத்துவ காப்பீடு புது இன்சூரன்ஸ் உள்ளிட்ட இன்சூரன்ஸ் பிரீமியத்தில் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. அந்த வரியை நீக்குவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். மக்களும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள்.அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாததுஏமாற்றம் அளிக்கிறது. எங்களைப் போன்ற மத்திய தர ஊழியர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு இந்த பட்ஜெட்டில் உயர்த்தப்படும் என எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் இது.பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு
பி.ஜெகதீசன், வர்த்தகர் சங்கத்தலைவர், ராமநாதபுரம்தனி நபர் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தாதது வருத்தம் அளிக்கிறது. வருமான வரி சிலாப்புகளை மாற்றியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. புதிய ரோடு இணைப்புக்காக ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. முத்ரா கடன் அதிகபட்சமாக ரூ.20 லட்சமாக உயர்த்தியிருப்பது, தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைத்திருப்பது நல்ல அம்சம். தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பு உள்ளது. 3 கோடி புதிய வீடுகள் கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது நல்ல விஷயம். ஜி.எஸ்.டி., வரி அதிகமாக செலுத்தும் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்காமல் புறக்கணித்தது வருத்தமளிக்கிறது. சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அறிவித்த பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி., வரி குறைப்பு பற்றி எதுவும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்திற்கு எந்த வளர்ச்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு இல்லை.இளைஞர்களுக்கு 500 துறைகளில் வேலை வாய்ப்பு
கே.புருேஷாத்தமன், தொழில் முனைவோர், ராமநாதபுரம்தங்கம் வெள்ளி பொருட்களுக்கு சுங்க வரி 6 சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. வெளி நாடுகளில் இருந்து கடத்தி வருவது குறையும். தங்கம், வெள்ளி விலை குறையும். வருமான வரி ஸ்லாப்புகளை மாற்றி அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. தொழில் செய்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். இளைஞர்களுக்கு 500 துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் வரவேற்கதக்கது. 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய மாற்றும் திட்டம் வரவேற்க தக்கது. தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றமளிக்கிறது.300 யூனிட் இலவச மின்சாரம்
ஆர்.ராம்குமார், வக்கீல், திருவாடானைசோலார் மின் உற்பத்தி திட்டம் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வசதியில்லாத கிராமங்கள் நிறைய இருப்பதால் இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். பத்திரப்பதிவு அதிகமாக நடக்கும் மாநிலங்களுக்கு கட்டணம் குறைக்கப்படுவது, தங்கம், வெள்ளி சுங்க வரியை 6 சதவீதம் குறைத்திருப்பது, நில அளவை திட்டங்களில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவது போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கது. பா.ஜ., ஆதரவு மாநிலங்களான ஆந்திரா, பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படுவது ஒரு தலைபட்சமாக உள்ளது. அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் தமிழகம் உள்ளது. ஆகவே தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக தெரிகிறது.தமிழக மக்களை புறக்கணிக்கும் பட்ஜெட்
என்.ஜெ.போஸ், விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர், ராமேஸ்வரம்மத்திய பட்ஜெட்டில் பா.ஜ., கூட்டணி கட்சி ஆளும் ஆந்திரா, பீகார் மாநிலங்கள் வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். அதே சமயம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒரு பைசா கூட ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட் தமிழக வளர்ச்சியை மட்டுமின்றி மக்களின் வளர்ச்சியை புறக்கணிக்கும் பட்ஜெட். மத்திய அரசுக்கு அந்நிய செலாவணியை பெருமளவில் ஈட்டித் தரும் தமிழக மீனவர்களுக்கு எந்த நலத்திட்டமும், உதவியும் பட்ஜெட்டில் இல்லை. வரும் நிதியாண்டில் நாட்டின் பண வீக்கம் 4 சதவீதமாக குறையும் என குறிப்பிட்டு இருப்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தங்கம், வெள்ளி மீதான சுங்கவரியை குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது, இது ஏழைகளுக்கு பயன் தரும்.மாணவர்களுக்கு கல்விச்சலுகை
எஸ்.ஆனந்த கிருஷ்ணன் வருமான வரி செலுத்துபவர், பரமக்குடி.பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டாம் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ரூ.7 லட்சம் வரை 5 சதவீதம் மட்டுமே வரி அறிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் பெறுவோர் நிரந்தர கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் மாணவர்களுக்கு கல்விச்சலுகை ஏராளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சார்ந்த பணிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மெடி கிளைம் போன்ற பாலிசிகளுக்கு கூடுதல் வருமான வரி சலுகை வழங்கி இருக்கலாம். மற்றபடி மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது.அனைவரும் பாராட்டும் பட்ஜெட்
பா. கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர், சாயல்குடிதங்கத்திற்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது வரவேற்கத்தக்கது. புற்று நோயாளிகள் நிவாரணம் பெறும் வகையில் மூன்று வகை மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு சுங்கவரியில் இருந்து முழு விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக தொழில் கல்வி பயிலும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 ஊக்கத் தொகை வழங்குவது அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் மறைமுக முதலீட்டாளர்களுக்கு வரி நீக்கப்படுவது பாராட்டத்தக்கது. முத்ரா கடன் வழங்கும் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் பாராட்டத்தக்க அம்சங்கள் உள்ளன.இன்டர்ன்ஷிப் திட்டம் சிறப்பு
எல்.முத்துக்குமார், பட்டதாரி இளைஞர், முதுகுளத்துார்இளைஞர்களுக்கு ரூ.5000 மாதாந்திர உதவித் தொகையுடன் இன்டர்ன்ஷிப் திட்டம் வரவேற்கப்படுகிறது. தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லை. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி, முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வரவேற்கலாம். இளைஞர்களின் வேலை வாய்ப்புகளுக்குகான திட்டங்கள் அறிவிக்கப்படாதது கவலை அளிக்கிறது.