உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயன்பாடு இல்லாத சுகாதார வளாகம்: அரசு நிதி வீண்

பயன்பாடு இல்லாத சுகாதார வளாகம்: அரசு நிதி வீண்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழக்கன்னிச்சேரி கிராமத்தில் சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. ரூ. பல லட்சம் அரசு நிதி வீணாடிக்கப்பட்டுள்ளது.கீழக்கன்னிச்சேரி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சிலமாதங்களாகவே முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் சுகாதாரவளாகம் மக்கள் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. இதனால் அரசின் நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்வ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்