உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உயர்கல்வி வழிகாட்டுதல்பயிற்சி முகாம்

உயர்கல்வி வழிகாட்டுதல்பயிற்சி முகாம்

திருவாடானை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில்உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் திருவாடானை அரசு கலைக் கல்லுாரியில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன்னையா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், முதல்வர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா வரவேற்றார்.இதில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 'நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில் சார்ந்த கல்வி பயிலும் வகையில் உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள்பயிற்சி அளிக்கப்பட்டது. 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்ராமர், ஊடக ஆவண பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை