உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 29 பழங்குடியினருக்கு வீட்டுமனை பட்டா

29 பழங்குடியினருக்கு வீட்டுமனை பட்டா

பரமக்குடி : -பரமக்குடியில் வசிக்கும் 29 பழங்குடியினர் குடும்பங்களுக்கு லீலாவதி நகரில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பரமக்குடி வைகை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவர் சமூகத்தினர் வசிக்கின்றனர். பழங்குடியினரின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் 29 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அனைத்து பழங்குடியின மக்களின் குறைகள் முறையாக தீர்வு காணப்பட்டு அவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தாசில்தார் சாந்தி தெரிவித்தார். இவர்களுக்கு வேந்தோணி குரூப் லீலாவதி நகரில் தலா மூன்று சென்ட் வீதம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் பரமக்குடி சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் சேகர், தலைமை எழுத்தர் முத்துராமன், மண்டல துணை தாசில்தார் வெங்கடகிருஷ்ணன், ஆர்.ஐ., வேம்பு ராஜன், வி.ஏ.ஓ.,க்கள் சதீஷ்குமார், மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ