மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வில் அடையாள அட்டை வழங்கல்
18-Aug-2024
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும், பொது மக்களிடம் பா ஜ., கொள்கையை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் பேசினார்.முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நடந்தது. கிழக்கு ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தனர். சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு கார்டு வழங்கினார். அவர் பேசியதாவது:பா.ஜ., நாட்டு மக்களுக்கான கட்சி. பிரதமர் மோடி தலைமையில் மிகவும் பாதுகாப்பாகவும் உலக அரங்கில் தலை நிமிர்ந்தும் நாடு நிற்கிறது. அதே போன்று நான்காவது முறையாகவும் தொடர்ந்திடவும், வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையாக வென்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கவும் நிர்வாகிகள் முழுமையாக உழைக்க வேண்டும்.வீடு வீடாக சென்று பிரதமர் மோடி சாதனையை கூறி உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றார். மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் பிரவீன்குமார், சிறுபான்மை அணி மாநில செயலாளர் தியாகராஜன், தகவல் தொழில் நுட்ப மாநிலச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
18-Aug-2024