உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

ராமநாதபுரம் : தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளின் படி 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை தேர்தல் தொடர்பான பணிகள், பிரசாரங்களில் ஈடுபடுத்துவது குற்றம். அவ்வாறு ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் எச்சரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:குழந்தை தொழிலாளர் சட்டம் 1986 மற்றும் திருத்தப்பட்ட சட்டம்- 2016 விதிகளின் படி தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளின் படியும் 14 வயதிற்குட்பட்டவர்களை எந்த ஒரு தொழிலும் ஈடுபடுத்தக்கூடாது. இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி சிறார்களை தேர்தல் தொடர்பான பணிகளில்,பிரசாரங்களிலும் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என தெரிவித்துள்ளது. எனவே ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தின் போது சிறார்களை பயன்படுத்தக்கூடாது.கையில் சின்னம், கட்சி பதாகைகளை கொடுப்பதும், வாகனங்களில் அழைத்துச் செல்வதும், தேர்தல் ஊர்வலம், பிரசார பொதுக்கூட்டங்கள், ஓட்டுச் சேகரிக்க சிறார்களை உடன் அழைத்துச் செல்வது, பாட்டு பாட வைத்தல், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு பெறச் செய்தல், தேர்தல் விளம்பரத் துண்டுச்சீட்டுகளை கையில் கொடுத்தல் போன்றவை சட்டப்படி குற்றம். எனவே தேர்தல் தொடர்பான செயல்களில் சிறார்களை ஈடுபடுத்த வேண்டாம். மீறினால் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி