உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் வாரம் 3 நாள் மின் தடையால் மக்கள் அவதி

ராமேஸ்வரத்தில் வாரம் 3 நாள் மின் தடையால் மக்கள் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பராமரிப்பு என்ற பெயரில் வாரத்திற்கு 3 நாள் மின்தடை செய்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்கவும், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை கண்டு ரசிக்கவும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் இங்குள்ள விடுதிகளில் ஓரிரு நாட்கள் தங்கி இருந்து செல்கின்றனர்.ஆனால் ராமேஸ்வரம் பகுதியில் பராமரிப்பு என்ற பெயரில் ஏப்., முதல் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மின்தடை செய்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்புக்காக மாதத்திற்கு ஒருநாள் மின்தடை செய்தனர்.அப்போதெல்லாம் சேதமடைந்த மின்கம்பி, மின் கம்பங்களை அகற்றி தரமான கம்பி, கம்பங்களை பொருத்தாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர். தற்போது மீண்டும் பராமரிப்பு என்ற பெயரில் அடிக்கடி மின்தடை செய்கின்றனர்.வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், பள்ளி விடுமுறையில் வீடுகளில் இருக்கும் மாணவர்கள், முதியவர்கள், பொழுது போக்க, ஓய்வு எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.புனித நகரம் மற்றும் சுற்றுலா தலமான ராமேஸ்வரத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் நலன் கருதி இனிவரும் நாட்களில் மின்தடை இல்லாத நகரமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை