உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இளைஞர்களுக்கான பகுதி நேர  கலைப்பயிற்சி முகாம் துவக்கம் 

இளைஞர்களுக்கான பகுதி நேர  கலைப்பயிற்சி முகாம் துவக்கம் 

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கான பகுதி நேர கலைப்பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சி முகாம் 27 இடங்களில் நேற்று முன் தினம் (ஜூலை 12) மாலை துவங்கியது. ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமையாசிரியர் சரவணமாணிக்கம் தலைமை வகித்தார். தெம்மாங்கு பாட்டு ஆசிரியர் இருளாண்டி, கரகாட்ட ஆசிரியர் பாண்டியம்மாள், ஒயிலாட்ட ஆசிரியர் ராமகிருஷ்ணன், சிலம்பாட்ட ஆசிரியர் தனசேகரன் முன்னிலை வகித்தனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மருந்தாளுனர் ஞானக்குமார், ஏ.ஆர்.டி., ஆலோசகர் சத்தியேந்திரன் வாழ்த்தினர். கலை ஆசிரியர்கள் திறமைகளை வெளிக்காட்டினர். பரமக்குடி பீஷ்மர் தேகப்பயிற்சி ஆசான்கள் ராஜன், ஜெகன், சிலம்ப ஆசிரியர்கள் வரிசைக்கனி, கண்ணன், சிலம்பொலி ஆகாஷ், துர்காதேவி, ஹரிஷ்ராகுல் ஆகியோர் பங்கேற்றனர். கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பயன் பெறலாம். வயது தடையில்லை. 17 வயதிற்கு மேற்பட்ட 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். ஆண்டுக்கு ரூ.500 கட்டணத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமியப் பாடல் ஆகிய கலைகளை வெள்ளி, சனிக்கிழமை மாலை 4:00 முதல் 6:00 மணி வரையும் கற்கலாம். ஏற்பாடுகளை மேபார்வையாளர் லோகசுப்பிரமணியன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை