உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் ஜூன் 6ல் நாட்டுப் படகுகள் ஆய்வு 

ராமநாதபுரத்தில் ஜூன் 6ல் நாட்டுப் படகுகள் ஆய்வு 

தொண்டி : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 6ல் நாட்டுபடகுகளை ஆய்வு செய்யப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் கூறினார்.அவர் கூறியதாவது: மாவட்டம் (வடக்கு) ஆற்றங்கரையிலிருந்து எஸ்.பி.பட்டினம் வரை 2190 நாட்டுபடகுகளும், 84 விசைபடகுகளும் உள்ளன. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி முதற்கட்டமாக மே 31ல் விசைபடகுகள் ஆய்வு செய்யபட்டதில் அனைத்து படகுகளுக்கும் சரியான ஆவணங்கள் இருந்தது. அதனை தொடர்ந்து ஜூன் 6ல் நாட்டுபடகுகள் ஆய்வு செய்யப்படும். ஆய்வின்போது படகுகளின் தரம், உறுதி, தயாரிக்கப்பட்ட தேதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா என சரிபார்க்கபடும். படகு உரிமையாளர்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம் போன்ற பல ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருந்து ஆய்வுக்குழுவிற்கு விபரங்களையும் அளிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ