உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பனில் ரயில் துாக்கு பாலத்தை செப்.19க்குள் திறந்து மூட முடிவு

பாம்பனில் ரயில் துாக்கு பாலத்தை செப்.19க்குள் திறந்து மூட முடிவு

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை செப்.,19க்குள் சோதனை ரீதியாக திறந்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் துாக்கு பாலம் கட்டும் பணி முடிந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. தற்போது பாலத்தில் 650 டன், 245 அடி நீளமுள்ள துாக்கு பாலத்தை பொருத்தும் பணி முழு வீச்சில் நடக்கிறது. இந்த துாக்கு பாலம் லிப்ட் முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் திறந்து மூட உள்ளதால் நேற்று துாக்கு பாலத்தில் இரும்பு வடத்தை இணைத்து 75 அடி உயரத்தில் மேலே உள்ள இரும்பு வீலில் ஊழியர்கள் பொருத்தினர். மேலும் துாக்கு பாலத்தை தொழில்நுட்ப கருவியுடன் இணைத்த பின் செப்., 19க்குள் துாக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை நடக்கும். அதன் பின்னர் அடுத்தடுத்து பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அக்.,10க்குள் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை