உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கச்சத்தீவு விழா: 3,140 பேர் பங்கேற்பு

கச்சத்தீவு விழா: 3,140 பேர் பங்கேற்பு

ராமேஸ்வரம்:பாக் ஜலசந்தி கடலில் உள்ள கச்சத்தீவு, ராமேஸ்வரத்தில் இருந்து 21 கி.மீ., துாரத்தில் உள்ளது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமானோர் செல்கின்றனர்.நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 78 விசைப்படகுகள், 18 நாட்டுப்படகுகளில் 2,478 ஆண்கள், 587 பெண்கள், 75 சிறுவர்கள் என, 3,140 பேர் சென்றனர். மத்திய, மாநில உளவு போலீசார், சுங்கத்துறையினர் தீவிர சோதனை நடத்திய பின்னரே, அவர்கள் படகில் செல்ல அனுமதித்தனர்.நேற்று மாலை, 4:45 மணிக்கு சர்ச் முன் கொடி கம்பத்தில் சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் திருவிழா கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். பக்தர்களை ஏற்றிச்சென்ற, 21 நாட்டுப்படகுகளில், மூன்று படகுகளில் பக்கவாட்டில் எழுதி இருந்த பதிவு எண் குளறுபடியாக இருந்ததால் நடுக்கடலில் சோதனையிட்ட இலங்கை வீரர்கள் மூன்று படகுகளுக்கும் தடை விதித்து, அதில் இருந்த 51 பக்தர்களை ராமேஸ்வரத்திற்கு அனுப்பினர். பின், அவர்களை அதிகாரிகள், மாற்று விசைப்படகுகளில் மீண்டும் கச்சத்தீவுக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை