மேலும் செய்திகள்
மாவட்ட கோயில்களில் கும்பாபிஷேகம்
11-Feb-2025
கமுதி; கமுதி அருகே கோட்டைமேடு கிராமத்தில் தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் கோயில் மாசிக்களரி விழா பிப்.,16ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தாலுகா அலுவலகம், பஜார் வீதி உட்பட முக்கிய வீதிகளில் பால்குடம், வேல் குத்துதல், சக்தி கரகத்துடன் பக்தர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். கோட்டை முனீஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கமுதி தனி ஆயுதப்படை போலீசார், கோட்டைமேடு மக்கள் செய்தனர்.
11-Feb-2025