| ADDED : மே 24, 2024 02:24 AM
கமுதி: கமுதி அருகே ம.பச்சேரி கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம் துவங்கி நவகிரஹ ஹோமம், மகா சங்கல்பம், சுதர்சன ஹோமம், முதல் கால யாக சாலை பூஜை, தீபாராதனை நடந்தது. பின்பு புண்யாக வாசனம்,சோமபூஜை, இரண்டாம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதி நடத்தப்பட்டு கடம் புறப்பாட்டுக்கு பின் கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. தர்ம முனீஸ்வரருக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் கமுதி, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போன்று கமுதி அருகே ம.பச்சேரி கிராமத்தில் மாலைக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் துவங்கி நவகிரக ஹோமம், முதற் கால, இரண்டாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனைகள் நடந்தது. பின் கடம் புறப்பாட்டுக்கு பிறகு கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. மாலைக்காரியம்மனுக்கு பால், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம், பூஜைகள் நடந்தது.