உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வக்கீல்கள் ஸ்டிரைக்

வக்கீல்கள் ஸ்டிரைக்

திருவாடானை: புதிய சட்டத்திற்கு எதிராக திருவாடானை வக்கீல்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு வக்கீல்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திருவாடானை நீதிமன்றத்தில் ஜூலை 1 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். திருவாடானை வக்கீல் சங்கத் தலைவர் சிவராமன் கூறுகையில், புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஜூலை 8 வரை தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். ஸ்டிரைக்கால் நீதிமன்றங்களில் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ