ரயில் இன்ஜின் மோதி கால்கள் துண்டானவர் பலி
ராமநாதபுரம்,:-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர் ரயில் இன்ஜின் மோதியதில் கால்கள் துண்டாகி பலியானார். மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்த மீனவர் மைதீன் பிச்சை 38. இவர் பிப். 25ல் மண்டபம் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வந்த ரயில் இன்ஜின் மோதியதில் இரு கால்களும் துண்டான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை இறந்தார். மண்டபம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.