மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்டச் செயலாளர் காதர்பாட்ஷா ஆதரவாளர்கள் நேற்று பார்த்திபனுார் பள்ளியில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்ற விழாவில் மோதிக்கொண்டனர்.பரமக்குடி அருகே பார்த்திபனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவிற்கு அமைச்சர் சுப்பிரமணியன் வந்தார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா எம்.எல்.ஏ., வுடன் அவரவர் ஆதரவாளர்களும் வந்தனர்.ராஜகண்ணப்பன் முன்னால் சென்ற நிலையில் பின்னால் வந்த காதர்பாட்ஷா ஆதரவாளர்கள் வேகமாக முந்திக்கொண்டு பள்ளி நுழைவு வாயிலுக்கு சென்றனர். அங்கு இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் உள்ளிட்ட போலீசார் தி.மு.க., வினரை சமாதானம் செய்து பிரித்து அனுப்பினர். ஆனால் வழக்கம் போல் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் விழா மேடையில் அருகருகில் அமர்ந்து விழாவை முடித்து திரும்பினர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago