மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை சேதப்படுத்தியும் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வரும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக குரங்குகள் கூட்டமாக உலா வருகின்றன. மரங்களில் தங்கி இருந்து அவ்வப்போது கிடைக்கும் உணவை சாப்பிட்டு வந்தன. தற்போது சில நாட்களாக முதுகுளத்துார் செல்லியம்மன் கோயில் தெரு, பஜார் தெரு, முருகன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் உலா வரும் குரங்குகள் வீடுகளுக்கு வெளியே வைக்கப்படும் பொருட்களை சேதப்படுத்தியும், ரோட்டில் உலா வரும் குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகின்றன. முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே உள்ள அலைபேசி டவரில் அடிக்கடி இருப்பதால் அவ்வழியே செல்லும் பள்ளி குழந்தைகள் அச்சத்துடன் செல்கின்றனர். அவ்வப்போது பொது மக்களையும் குரங்குகள் விரட்டுகின்றன. இதில் ஒரு சில பெண்கள் காயம் அடைந்துள்ளனர்.இதே நிலை தொடர்ந்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே முதுகுளத்துார் பேரூராட்சி பகுதியில் உலா வரும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து பாதுகாப்பான இடத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago