உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழைக்கு ரோடு சேறும் சகதியாக மாறுவதால் வாகன ஓட்டிகள் அவதி

மழைக்கு ரோடு சேறும் சகதியாக மாறுவதால் வாகன ஓட்டிகள் அவதி

முதுகுளத்துார்: முதுகுளத்துார்--சாயல்குடி ரோடு மேலச்சாக்குளம் முக்குரோடு அருகே ரோடு சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.முதுகுளத்துார்--சாயல்குடி ரோட்டோரத்தில் கீழச்சாக்குளம் கண்மாய் கரை உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கரையில் மணல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது. தற்போது கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் இல்லாததால் மழையில் மண்அரிப்பு ஏற்பட்டு ரோடு சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால் முதுகுளத்துார்- -சாயல்குடி ரோடு மேலச்சாக்குளம் முக்கு ரோடு அருகே சேறும் சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே கீழச்சாக்குளம் கண்மாய் கரையில் தடுப்புசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ