மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நேற்று இரு பஸ்கள் ஒரே நேரத்தில் வர முடியாமல் ஒன்றுடன் ஒன்று உரசி ஜன்னல் கண்ணாடி, கம்பி சேதமடைந்தது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.ராமநாதபுரம் நகரின் அடையாளமாக உள்ள அரண்மனையை சுற்றிலும் ஏராளமான வணிக நிறுவனங்கள், வங்கிகள், ஓட்டல்கள், ஜவுளி, மளிகை கடைகள் நிறைய செயல்படுகின்றன. இதன் காரணமாக அரண்மனை ரோட்டில் எப்போதுமே அதிக வாகன போக்குவரத்து உள்ளது.சிலர் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவது, வியாபாரம் செய்வது தொடர்கிறது. இதனால் இரண்டு கனரக வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிர் எதிரே வரும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நேற்று இரண்டு அரசு பஸ்கள் அரண்மனை ரோட்டில் எதிர் எதிரே வந்த போது கடந்து செல்ல போதிய இடமின்றி ஒன்றுடன் ஒன்று உரசி ஜன்னல் கண்ணாடி, கம்பி சேதமடைந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். எனவே அரண்மனை அருகே ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட நகராட்சி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago