உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலுயிர் பெருக்கத்தில் கால நிலை மாற்றம் குறித்து தேசிய கருத்தரங்கு 

கடலுயிர் பெருக்கத்தில் கால நிலை மாற்றம் குறித்து தேசிய கருத்தரங்கு 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, பாரதிதாசன் பல்கலை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் இணைந்து கடலுயிர்கள் பெருக்கத்தில் கால நிலை மாற்றம் குறித்த தேசிய கருத்தரங்கை நடத்தினர், கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். கருத்தரங்க நோக்கம் குறித்து பாரதிதாசன் பல்கலை பருவநிலை மாறுபாடு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் கோவிந்தராஜ் பேசினார். முதல் அமர்வில் கல்லுாரியின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் காசிநாததுரை, உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்று பேசுகையில் காலம் எல்லாவற்றையும் தீர்மானிப்பது தான். ஆனால் இன்று பருவ கால மாறுதல்களின் தாக்கத்தால் கடலுயிர்கள் வாழ்வதிலும், தன்னுயிர் பெருக்கத்திற்கும் பிரச்னைகள் உள்ளதாக ஆதாரங்களுடன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா வாழ்த்தினர். கல்லுாரி உள்தர உறுதிப்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ