| ADDED : ஜூலை 18, 2024 10:32 PM
கீழக்கரை : கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நேற்று கீழக்கரையில் நடந்தது.ரோட்டரி சங்க பட்டைய தலைவர் அலாவுதீன் தலைமை வகித்தார். புதிய தலைவராக கேசவன், செயலாளராக சிவகார்த்திக், பொருளாளராக ராசிக்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்னர். சிறப்பு விருந்தினராக ஜெ.தினேஷ் பாபு, வருங்கால கவர்னர் தேர்வு துணை கவர்னர் ரம்யா, ராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டய தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, சிறப்பு பேச்சாளராக சுஜாதா குமார் கலந்து கொண்டனர்.புதிய உறுப்பினராக ஆதில் மற்றும் அணியினர் இணைந்தனர். சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டு மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கப்பட்டது.ரெட் கிராஸ் மருத்துவமனைக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. கீழக்கரை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள், செயலாளர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.