மேலும் செய்திகள்
தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அச்சம்
6 hour(s) ago
இலவச மருத்துவ முகாம்
6 hour(s) ago
கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி
6 hour(s) ago
இன்று புதிய வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
6 hour(s) ago
பரமக்குடி : -ராமநாதபுரம் லோக்சபா தொகுதி இண்டியா கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து பரமக்குடியில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: ஜனநாயகமா, சர்வாதிகாரமா என்ற கேள்விக்கு விடை காணப்போகும் தேர்தல். சுதந்திரத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது சுதந்திரப் போர் என்று சொல்லக்கூடிய வகையில் இந்த தேர்தல் அமைந்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி இன்றும் தமிழ்நாட்டில் தான் உள்ளார். இத்தோடு 8 முறை வந்து விட்டார். அவர் வந்ததோடு மட்டுமல்லாமல் உயர்ந்த பதவியில் உள்ளார் என்பதை மறந்து சுற்றிச் சுற்றி வருகிறார். வெள்ளத்தின் போது எட்டிப் பார்க்காத பிரதமர் திராவிட இயக்கத்தை அழித்து ஒழித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பேன் என்று பேசுகிறார். எதிர் கட்சிகளை வசை பாடக்கூடாது. திராவிட இயக்கத்தின் 100 ஆண்டு வரலாறு உங்களுக்கு தெரியுமா. மணிப்பூரில் படுகொலை நடக்கும்போது செல்லவில்லை. ஆனால் தமிழகத்திற்கு மட்டும் வருகிறீர்கள். நீங்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. நீங்கள் பெறப்போவது பூஜ்ஜியம் தான். ஹிந்தியும், சமஸ்கிருதமும் தான் ஆட்சி மொழியாகவும், தேசிய மொழியாகவும் இருக்கும். ஆங்கிலத்திற்கு இடமில்லை என்கின்றனர். தமிழ்நாடு என்று அழைக்க மட்டோம். தமிழகம் என்று தான் அழைப்போம் என்கிறார் கவர்னர் ரவி. ஆகவே பிரதமர் மோடிக்கு எந்த தொகுதியிலும் வெற்றி கிடைக்கப் போவது இல்லை என்றார்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago