உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி நகர் பகுதியில் அதிகாரிகள் பெயரளவில் ஆக்கிரமிப்பு அகற்றினர்

சாயல்குடி நகர் பகுதியில் அதிகாரிகள் பெயரளவில் ஆக்கிரமிப்பு அகற்றினர்

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதிகளில் ராமநாதபுரம்- தூத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை ரோடு பிரதானமாக உள்ளது. இங்கு பெயரளவில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றியது பல சந்தேகங்களை ஏற்படுத்தியது.கிழக்கு கடற்கரை சாலை, பஸ் ஸ்டாண்ட் அருகே அருப்புக்கோட்டை ரோட்டிலும் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்தை சந்திக்கின்றனர்.சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம், கடலாடி வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலை துறையினர், சாயல்குடி போலீசார் இணைந்து ரோட்டோர ஆக்கிரமிப்புகளை இயந்திரங்களைக் கொண்டு அகற்றினர். பெயரளவில் இது நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சி.பி.ஐ.எம்.எல்., கட்சியின் தாலுகா செயலாளர் முருகேசன் கூறியதாவது: எவ்வளவு முறை ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் மீண்டும் கடைக்காரர்கள் பழைய நிலைக்கு ஆக்கிரமிப்புகளை கொண்டு வருகின்றனர். இதனால் மேலும் ரோடு சுருங்கி வருகிறது.இதனை தடுக்க 2009ல் அமைக்கப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு பக்கமும் கழிவுநீர் வாறுகால் செல்கிறது.அதனை மூடிவிட்டு கூடுதலாக சாலை விரிவாக்கத்திற்காக உரிய இடத்தில் கழிவுநீர் வாறுகால்வாயை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் போது கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் கடக்கவும், சாலையோர நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் வசதியாக இருக்கும். எனவே வளர்ந்து வரும் சாயல்குடி நகரில் போக்குவரத்து நெரிசல் என்பது சவாலான விஷயமாகவே உள்ளது. பள்ளி, கல்லுாரிகள் திறந்து விட்டால் சாயல்குடி நகர் பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் அளவீடுகள் மற்றும் கணக்கீடுகளை செய்து ஆக்கிரமிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ