| ADDED : ஆக 22, 2024 02:28 AM
திருவாடானை; அரசு அலுவலகங்கள் முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அலைபேசி எண்களை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் ஏராளமானோர் சிக்குகின்றனர். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் நலன் கருதியும், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடை செய்யும் நோக்கத்தில் லஞ்சம் வாங்கும் அலுவலர்களின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரிவிக்கும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு அலைபேசி எண்களை எழுதி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த உத்தரவு அமலில் இருந்த போதும் பெரும்பாலான அலுவலகங்களில் அந்த எண்கள் மறைக்கப்பட்டு விட்டது. இது குறித்து சில அரசு அலுவலர்கள் கூறியதாவது:அனைத்து துறை அலுவலகங்கள் முன்பும் லஞ்ச ஒழிப்புத்துறை அலைபேசி எண்களை எழுதி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.,: 94982 15697, 94986 52169. இன்ஸ்பெக்டர் (1): 94981 88390, 94986 52166, இன்ஸ்பெக்டர் (2): 96000 82798, 94986 52167, அலுவலக எண் 04567 230036 ஆகிய எண்கள் கொண்ட பலகை அரசு அலுவலகங்கள் முன்பு வைக்கும் பணிகள் நடக்கிறது. லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.