மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம் உள்ளது.பாம்பன் கடலில் 1988 அக்.,2ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடிக்கு வந்து செல்கின்றனர்.பாலத்தை தேசிய நெடுஞ்சாலைதுறை பராமரித்த நிலையில் காலப்போக்கில் கண்டு கொள்ளாமல் விட்டதால் பாலத்தின் இருபுறமும் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை.ஐந்து ஆண்டுகளுக்கு முன் பாலத்தில் 220 எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தி ஜொலித்தது. இதுவும் உப்புக் காற்றில் பழுதாகி 27 விளக்குகள் தவிர பிற விளக்குகள் எரியாததால் பாலம் இருளில் மூழ்கியுள்ளது.இதனால் பாலத்தில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி பலர் காயம் அடைகின்றனர். எனவே மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago