உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்; ஏப்.21ல் திருக்கல்யாணம்

பரமக்குடி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்; ஏப்.21ல் திருக்கல்யாணம்

பரமக்குடி: பரமக்குடி பெரிய பஜார் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும்மதுரை சித்திரை திருவிழா போன்று நடப்பது வழக்கம். நேற்று காலை 10:00 மணிக்கு சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் நந்தி கொடி ஏற்றினர். மாலை பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி வலம் வந்தனர். தினமும் சுவாமி அம்மன் தனித்தனியாக கற்பகத்தரு, கிளி, பூதம், சிங்கம், குதிரை, கைலாச வாகனம், காமதேனு, ரிஷபம், நந்திகேஸ்வரர், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் வலம் வருவர்.ஏப்.18 காலை நடராஜர்புறப்பாடு, மறுநாள் பிச்சாண்டவர் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளுவார். ஏப்.,20 இரவு திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.21 மாலை 5:00 மணிக்கு மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடக்க உள்ளது. அன்று இரவு யானை மற்றும் பூ பல்லக்கில் பட்டண பிரவேசம் நடக்கும். மறுநாள் காலை 9.30 மணிக்கு சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் விமரிசையாக நடக்க உள்ளது. ஏப்.23 கொடி இறக்கமும், மறுநாள் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ