உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமபத நாதனாக சேஷ வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள்

பரமபத நாதனாக சேஷ வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள்

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவையொட்டி பரமபத நாதனாக சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் ஜூலை 13ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.அன்னம், சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் நேற்று பரமபத நாதனாக சேஷ வாகனத்தில் வீற்றிருந்தார்.இன்று பெரிய திருவடியான கருட வாகனத்தில் வருகிறார். தினமும் காலை, மாலை வீதி உலா வரும் பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். ஜூலை 18 இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.அன்று திருமண வரம், குழந்தை பேறு வேண்டுதல் உள்ளவர்கள் நேத்திக்கடன் செலுத்த உள்ளனர். விழாவில் தினமும் பாகவதர்கள் பஜனை பாடல்கள் மற்றும் பாசுரங்களை இசைத்தபடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை