உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி சமையலர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தல்  

பள்ளி சமையலர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தல்  

திருவாடானை: சாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் சமையலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒரு தரப்பை சேர்ந்த பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் எழுத்தாயிரமுடைய அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இது சம்பந்தமாக சில நாட்களுக்கு முன் தாசில்தார் அமர்நாத் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவின் படி அனைவரும் ஒற்றுமையுடன் திருவிழா நடத்த வேண்டும் என்று பேசி முடிவு செய்யபட்டது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் குதிரைக்கு கண் திறப்பு விழா நடந்தது. அப்போது குதிரைக்கு மாலை அணிவிப்பதில் இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர்.அப்போது அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் சமையலர் தகாத வார்த்தைகளால் பேசியதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று ஒரு தரப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்தனர். திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி