உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் வெயிலில் தவிக்கும் பயணிகள்; நிழற்குடை அமைக்க கோரிக்கை

பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் வெயிலில் தவிக்கும் பயணிகள்; நிழற்குடை அமைக்க கோரிக்கை

பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் போதிய நிழற்குடை வசதியின்றி பயணிகள் வெயிலில் தவிக்கும் நிலையில் தற்காலிக நிழற்குடைகளை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் தினமும் நுாறுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் கிராமப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வந்து செல்கின்றனர்.மேலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலத்திற்கு செல்லும் மக்களும் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் நிலை உள்ளது. காலை 7:00 மணி முதல் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பஸ் ஸ்டாண்டில் ஒதுங்கி நிற்க கூட இடமின்றி பயணிகள் தவிக்கின்றனர். கோடை வெயில் காலத்தில் பஸ் ஸ்டாண்டுகளில் கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் நிற்க இடம் இல்லாமல் உள்ளது. ஆகவே பயணிகள் நிற்பதற்கான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிகாரிகள் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்நிலையில் டவுன் பஸ்கள் நிறுத்தம் சீராக இன்றி, ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் பயணிகள் நீண்ட துாரம் ஒதுங்கி நிற்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகளை அமைத்து பொதுமக்களை வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொரு முறை பஸ் வரும் போதும் சிரமத்திற்குள்ளாக நேர்வதால் தற்காலிக நிழற்குடை அமைப்பது மட்டுமே சாத்தியம் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே நகராட்சி, போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட துறையினர் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை