உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / படிக்கட்டு உடைந்த அரசு பஸ் பயணியர் நடுவழியில் அவதி

படிக்கட்டு உடைந்த அரசு பஸ் பயணியர் நடுவழியில் அவதி

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து, '2 ஏ' என்ற அரசு டவுன் பஸ் துாவல், பாம்பூர் வழியாக பரமக்குடிக்கு இயக்கப்படுகிறது. இதில் காலை, மாலையில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் செல்கின்றனர். குறிப்பாக, மாலையில் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று மாலை முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்ட பஸ், இங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்ற போது பின்பக்கம் இருந்த படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.அதில் பயணித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பாதி வழியில் இறக்கி விட்டு, பஸ்சை டிப்போவுக்கு எடுத்துச் சென்றனர். இதனால், அவதிப்பட்ட பயணியர் வேறுவழியின்றி மற்ற வாகனங்களிலும், ஆட்டோவிலும், நடந்தும் சென்றனர். இதுபோன்ற பிரச்னைகள் இனி ஏற்படுவதை தடுக்க பஸ் பராமரிப்பு, ஆய்வு அவசியம் என பாதிக்கப்பட்ட பயணியர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை