உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளால் மக்கள் அச்சம்

ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் ஊருணியில் படிக்கட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள்​வசிக்கின்றனர். இங்கு கிராம மக்கள் குளிப்பதற்கும் மழைநீரை தேக்கி வைப்பதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஊர்காவலன் கோயில் ஊருணி வெட்டப்பட்டு பயன்படுத்தி வந்தனர்.மக்களின் வசதிக்காக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது. பின்பு முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் படிக்கட்டுகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் தேங்கும் மழைநீரை கிராம மக்கள் தண்ணீர் வற்றும் வரை குளிப்பது, துணி துவைப்பது, அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.படிக்கட்டுகள் சேதமடைந்து இருப்பதால் ஊருணிக்கு வருவதற்கே அச்சப்படுகின்றனர். சேதமடைந்த படிக்கட்டுகள் விஷப்பூச்சிகள் தங்கும் கூடாரமாக மாறி வருகிறது. தற்போது கோடை காலத்தை பயன்படுத்தி சேதமடைந்துள்ள படிக்கட்டுகளை மராமத்து பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை