உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரண்டு நாளாக குறைவழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதி

இரண்டு நாளாக குறைவழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதி

முதுகுளத்துார்: -முதுகுளத்துார்- கடலாடி ரோட்டில் உள்ள வீடுகளுக்கு 2 நாட்களாக குறைவழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட கடலாடி ரோட்டில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார் துணை மின் நிலையத்தில் இருந்து முதுகுளத்துார்--சாயல்குடி ரோடு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அப்பகுதி வீடுகளுக்கு மின்சப்ளை செய்யப்படுகிறது.இங்கு அவ்வப்போது மின்தடை ஏற்பட்டதால் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. தற்போது இப்பகுதி வீடுகளுக்கு குறைவழுத்த மின் விநியோகம், மின்தடை ஏற்படுகிறது.இதனால் வீடுகளில் உள்ள பேன், மிக்ஸி உட்பட எலக்ட்ரிக் பொருட்கள் பயன்படுத்த முடியவில்லை. இரவு நேரத்தில் துாங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 2 நாட்களாக குறைவழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மின்வாரியத்தினர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மின்வாரியத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை