உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடப்பதற்கே லாயக்கற்ற ரோடால் மக்கள் அவதி

நடப்பதற்கே லாயக்கற்ற ரோடால் மக்கள் அவதி

கமுதி : கமுதி அருகே சேர்ந்தகோட்டை கிராமத்திற்கு செல்லும் ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே லாயக்கற்ற ரோட்டால் மக்கள் சிரமப்படுகின்றனர்.கமுதி அருகே சேர்ந்தகோட்டை கிராமத்தில்​ 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சாமிபட்டி கிராமத்திலிருந்து சேர்ந்தகோட்டை வழியாக இலந்தைகுளம் வரை செல்லும் 2 கி.மீ., ரோடு கடந்த பலஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது வரை மராமத்து பணி செய்யப்படாதால் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது.இவ்வழியே நடந்து செல்லும் கிராமமக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை கிராமசபை கூட்டத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து புதிதாக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ