உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரிய முத்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா

பெரிய முத்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா

கமுதி: -கமுதி அருகே வலைய பூக்குளம் கிராமத்தில் பெரிய முத்தம்மன், சந்தன மாரியம்மன், பத்திரகாளியம்மன், பெரியாண்டவர் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு மே 13ல் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு காப்பு கட்டிய பக்தர்கள் கிராமத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து கோயிலுக்கு சென்றனர். மூலவரான பெரியமுத்தம்மனுக்கு பால், சந்தனம், திரவியப் பொடி உட்பட 21 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் 508 விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை வலையபூக்குளம் க்ஷத்திரிய நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ