உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி நேரத்தில் பஸ் கேட்டு முக்காடு போட்டு பெண்கள் மனு

பள்ளி நேரத்தில் பஸ் கேட்டு முக்காடு போட்டு பெண்கள் மனு

ராமநாதபுரம் : பரமக்குடி அருகே வீரவனுார் கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் வேண்டும். பள்ளி நேரத்தில் பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி தலையில் முக்காடிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:வீரனுாரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் வசிக்கின்றனர். காவிரி குடிநீர் கடந்த 3 மாதங்களாக வரவில்லை. ஆழ்குழாய் கிணறு தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. இதனால் குடம் ரூ.12க்கு குடிநீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர். மேலும் கடந்த காலங்களில் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வசதியாக காலை 8:00 மணிக்குமேல் ராமநாதபுரம், பரமக்குடி வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இப்பஸ்கள் சில மாதங்களாக வருவது இல்லை. மாறாக காலை 7:00 மணிக்கு வந்து செல்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் காலை உணவு அருந்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி வழக்கம் போல காலை 8:00 மணிக்கு மேல் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.காவிரி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை