உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட உற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.உடற்கல்வி இயக்குனர் அன்சாரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். 1500 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் என்ற திட்டத்தை ரத்து செய்து 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும்.விளையாட்டு சார்ந்த பணிகளைத் தவிர வேறு பணி வழங்கக் கூடாது. எழுத்துத் தேர்வு, சீனியாரிட்டி அடிப்படையில் உடற்கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி கோஷமிட்டனர்.தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், அரசு உதவிபெறும், தனியார் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை