உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நயினார்கோவிலில் 15.41 ஏக்கரில் பயன்தரும் மரக்கன்றுகள் நடவு

நயினார்கோவிலில் 15.41 ஏக்கரில் பயன்தரும் மரக்கன்றுகள் நடவு

நயினார்கோவில்: -பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் பகைவென்றி கிராமத்தில் 15.41 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு பயன் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளன.வேளாண் துறையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்கள் சீரமைக்கப்பட்டு மா, கொய்யா, தென்னை நடவு செய்யப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் இதே போல் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயன்பெறும் வகையில் செயல்பட வேண்டும்.எண்ணெய் செக்கு, மாவு மில் செயல்படுத்தும் இளைஞர்களை ஊக்கப்படுத்தினர். இவர்களுக்கு ரூ.1 லட்சம் அரசு மானிய நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் வல்லம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் மின் இணைப்பு பெற்ற விவசாயியை ஊக்கப்படுத்தினார்.அப்போது வேளாண் இணை இயக்குனர் கண்ணையா, துணை இயக்குனர் பாஸ்கர மணியன், மாநிலத் திட்ட இணை இயக்குனர் அமர்நாத், பொறியியல் துறை செயற்பொறியாளர் நாகராஜன், உதவி இயக்குனர்கள் பானுபிரகாஷ், நாகராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை