உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி போஸ்டர்

மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி போஸ்டர்

தொண்டி : தொண்டி பஸ் ஸ்டாண்ட் அருகே மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.தொண்டி பஸ்ஸ்டாண்ட் அருகே பழமையான வேப்பமரத்தின் ஒரு பகுதி வெட்டப்பட்டுள்ளது.இதை கண்டித்து தொண்டி சிவன் கோயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:திருவாடானை தாலுகா தொண்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு நிலங்களில் உள்ள மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவதை அரசு கண்டும், காணாமல் இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இச்செயலை செய்தவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை