உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களின் வாசிப்பு திறன் அதிகரிக்க திட்டம்

மாணவர்களின் வாசிப்பு திறன் அதிகரிக்க திட்டம்

திருவாடானை : அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்க நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.இப்புத்தகம் உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம் என மாநில ஒருங்கிணைந்த பள்ளி மாநில திட்ட இயக்கத்திலிருந்து தகவல் வந்துள்ளது. அதற்கான படைப்புகளை தயார் செய்து வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை