உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தடை செய்யப்பட்ட புகையிலை ஆய்வு

தடை செய்யப்பட்ட புகையிலை ஆய்வு

தொண்டி: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 பெட்டிக்கடைகளில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து எச்சரிக்கை செய்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஹபீப்ராஜா கூறியதாவது:பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அளிக்கும் புகாரின் பேரில் தொண்டியில் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல் கட்டமாக கடைகாரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அபராதம் விதிக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை