உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு போக்குவரத்து கழகத்தில்  தகுதிச்சான்று பிரிவு மீண்டும் துவக்கம்

அரசு போக்குவரத்து கழகத்தில்  தகுதிச்சான்று பிரிவு மீண்டும் துவக்கம்

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக்கழக தகுதிச் சான்று பிரிவு மீண்டும் செயல்படத் துவங்கியது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார், ராமநாதபுரம் நகர், புறநகர் கிளை ஆகிய 6 பணிமனைகள் உள்ள நிலையில் இங்கிருந்த தகுதிச் சான்று பிரிவை மூடிவிட்டு இதை விட குறைவான கிளைகளை கொண்ட தேவகோட்டைக்கு தகுதி சான்று பிரிவு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் தகுதிச் சான்றுப் பிரிவு மூடப்பட்டால் மண்டலமாக அறிவிக்கப்படாத நிலை ஏற்படும். இதனை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் தகுதிச்சான்று பிரிவு முன்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் லிட், நிர்வாக இயக்குநராக இருந்த மகேந்திரகுமார் மாற்றப்பட்டார். பொன்முடி புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவரிடம் தேவகோட்டைக்கு மாற்றப்பட்டது தேவையற்ற செலவு, அலைக்கழிப்பை ஏற்படுத்தும் என தொழிற்சங்கங்கத்தினர் முறையிட்டனர்.இதையடுத்து நேற்று முதல் நிர்வாக இயக்குநர் பொன்முடி உத்தரவின் படி ராமநாதபுரத்தில் தகுதிச் சான்று பிரிவு செயல்பட துவங்கியுள்ளது. இதனால் பொது மக்களும், அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ