உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாடகைக்கு எடுத்த டிராக்டரை திருப்பி கொடுப்பதற்கு மறுப்பு

வாடகைக்கு எடுத்த டிராக்டரை திருப்பி கொடுப்பதற்கு மறுப்பு

திருவாடானை: திருவாடானை அருகே தனியாரிடம் வாடகைக்கு எடுத்த டிராக்டரை திருப்பி கொடுக்க மறுத்தவர் மீது வழக்கு பதியப்பட்டது.திருவாடானை அருகே சீவலாத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் 43. இவர் காரைக்குடியில் உள்ள தனியார் டிராக்டர் மோட்டார் கம்பெனியில் டிராக்டரை வாடகைக்கு எடுத்து விவசாய வேலையில் ஈடுபட்டார்.2023 செப்.25ல் அஞ்சுகோட்டையை சேர்ந்த பீட்டர் மூன்று நாட்களுக்கு டிராக்டர் வாடகைக்கு கேட்டு அதற்குரிய வாடகையை கொடுத்து விடுவதாக கூறி ஓட்டிச் சென்றார். ஒரு மாதத்திற்கு மேலாகியும் டிராக்டரை திருப்பி கொடுக்கவில்லை. வாடகையும் கொடுக்கவில்லை. இந்நிலையில் டிராக்டரை திருப்பி பெறுவதற்காக 2023 அக்.31ல் பீட்டர் வீட்டிற்கு ரமேஷ் சென்றார். அங்கு டிராக்டரை திருப்பி கொடுக்க முடியாது என்று கூறியதால் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் ரமேஷ் புகார் செய்தார்.அந்த மனு மீது திருவாடானை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை